மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து கொடுத்த தாய்.. பச்சிளம் குழந்தை உயிரிழப்பு..

 
குழந்தை


திருச்சியில்  மெடிக்கலில் வாங்கி வரப்பட்ட மருத்தை கொடுத்ததில் 2 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரதைச்  சேர்ந்த ஒரு தாய் ஒருவர்   மருத்துவரை ஆலோசிக்காமல்  தனது   இரண்டரை மாத பச்சிளம் மெடிக்கலில் மருந்து வாங்கி கொடுத்துள்ளார்..  குழந்தை தொடர்ந்து வயிற்று வலியால் துடித்தால்  தானாகவே மெடிக்கலுக்குச் சென்று,  குழந்தைக்கு வயிற்று வலிக்கு மருந்து வாங்கியுள்ளார். மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலே  கடைக்காரரும் மருந்தை கொடுத்திருக்கிறார்.  அந்த மருந்தை அருந்திய பின்னர் குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமாகியிருக்கிறது. இதனால் பதறிப்போன தாய் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றுள்ளார்.

குழந்தைக்கு மருந்து

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் , இன்று சிகிச்சை பலனின்றி இரண்டரை மாத பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து  ஜம்புநாதபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும்  மருத்துவரின் ஆலோசனையின்றி பொதுமக்கள் தவறான சிகிச்சை முறைகளை தாங்களாக கையாள்வது சட்டப்படி  குற்றம் என்று மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குழந்தை

பொதுமக்கள் மருத்துவர் ஆலோசனை  இன்றி மருந்துகள் வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர்,  உரிய அங்கீகாரம் , கல்வித் தகுதி இல்லாமல் மருத்துவ சிகிச்சை அளிப்பதோ, மருந்துகள் விற்பதோ சட்டப்படி குற்றம் என்று தெரிவித்துள்ளார்.. இதுபோன்ற செயலகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாலகிருஷ்ணன்  எச்சரித்துள்ளார்.   தாயின் தவறான சிகிச்சை முறையால் பச்சிளம் குழந்தை உயிரிழந்த விவகாரம் ஜம்புநாதபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.