கல்குவாரியில் பாறை சரிந்து 2 பேர் உயிரிழப்பு!!

 
ttn

பெரம்பலூர் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து 2 பேர்  உயிரிழந்துள்ளனர்.

Death

பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையத்தில் செயல்படும் கல்குவாரியில் பாறை சரிந்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.  இந்த விபத்தில் சிக்கி சுப்பிரமணி,  வினோத் என்று இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த  நிலையில் காவல்துறை கண்காணிப்பாளர் மணி மருத்துவமனைக்கு நேரடியாக சென்று சம்பவம் குறித்து விசாரணை செய்தார்.  பாறை சரிந்து விழுந்ததில் நமச்சிவாயம் என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.கல்குவாரி அதிமுக பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

tn

பாறை சரிந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் , மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  விபத்து ஏற்பட்டதன் காரணமாக கல்குவாரி மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடப்பிரியா தெரிவித்துள்ளார் .அத்துடன் விபத்து நடந்த இடத்தில்  கனிமவளத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்