மண் சரிந்து 2 பேர் பலி! திருவண்ணாமலையில் சோகம்

 
மண் சரிந்து 2 பேர் பலி! திருவண்ணாமலையில் சோகம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கிணறு தோண்டும்போது மண் சரிந்து இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்லது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கிணறு தோண்டும் பணியின்போது திடீர் மண் சரிவு ஏற்பட்டது. கஸ்தம்பாடியில் கிணறு தோண்டியபோது மண் சரிந்து செல்வமணி, ரவிச்சந்திரன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ஒருவர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். நேற்று பெய்த மழையால் ஈரமான மண் திடீரென சரிந்ததாக கூறப்படுகிறது. கிணறுதோண்டும் பணியில் நால்வர் ஈடுபட்டிருந்த நிலையில், ஒருவர் நல்வாய்ப்பாக தப்பினார்.