எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த +2 மாணவி..!

 
1

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைவது மலையேற்ற வீரர்களில் பலருக்கும் ஒரு கனவு. எவரெஸ்ட்டை ஏறுவதற்கு முன்பாக, கடல் மட்டத்திலிருந்து 6,119 மீட்டர் உயரத்தில் இருக்கும் லொபுச்சே என்ற சிகரத்தை அடைய வேண்டும்.அந்த வகையில், மிகவும் இளம் வயதில் இந்த சிகரத்தை ஏறி சாதனை படைத்து இருக்கிறார் காம்யா கார்த்திகேயன். இவருக்கு வயது 16 ஆகும். 

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் காம்யா கார்த்திகேயனின் இந்த சாதனைக்கு அவரது தந்தையும் கப்பல்படை அதிகாரியுமான கேடர் கார்த்திகேயன் பக்கபலமாக இருந்து மகளின் முயற்சியை சாதனையாக்க உதவி இருக்கிறார்.

உலகின் 7 கண்டங்களில் உள்ள 7 உயர்ந்த சிகரங்களிலும் ஏறி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்ட காம்யா இதுவரை 6 சிகரங்களை தொட்டு சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாது வரும் டிசம்பரில் அண்டார்டிகா கண்டத்தில் உள்ள வின்சன் மாசிப் சிகரத்தில் ஏறி தனது சாதனை பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாக கூறபட்டு இருக்கிறது.

நேப்பால் பகுதியில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய காம்யா இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பெண்கள் பட்டியலில் இந்தியளவில் முதல் இடத்தையும் உலகளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்து இருக்கிறார். இன்னும் பல சாதனை மற்றும் விருதுகளுக்கும் இவர் சொந்தக்காரராகும்.