ஒரே குடும்பத்தில் 2 பெண் ஐ.ஏ.எஸ்- விவசாயியின் மகள்கள் சாதனை

 
ஒரே குடும்பத்தில் 2 பெண் ஐ.ஏ.எஸ்- விவசாயியின் மகள்கள் சாதனை

கடலூரில் தங்கை சார் ஆட்சியராக உள்ள நிலையில், அக்காவும் தற்பொழுது ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் கிராமத்தை சேர்ந்த முந்திரி விவசாயி ராமநாதன். இவரது மூத்த மகள் சுஷ்மிதா ராமநாதன் UPSC தேர்வில் அகில இந்திய தரவரிசையில்  528- இடத்தில் வெற்றி பெற்று கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இவரது தங்கை ஐஸ்வர்யா கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற UPSC தேர்வில் தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும், அகில இந்திய அளவில் 47வது இடத்தையும் பெற்று தற்போது சென்னை பொன்னேரி சார் ஆட்சியராக உள்ளார். 

இதுகுறித்து சுஷ்மிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், “கிராமத்தில் பிறந்த நான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு எழுத வேண்டும். அதற்கு முழுமையாக படிக்கவேண்டும் என ஆர்வம் கூட்டி அடித்தளம் போட்டவர்கள் எனது பெற்றோர்கள் தான். எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததால் போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன். பெண்களுக்கு கல்வி முக்கியம், கல்வி மூலமாகதான் முன்னேற்றம் அடையமுடியும் என எனது அம்மா தான் முழுமையாக கூறிவந்தார்கள். பெண்கள் வளர்ச்சிக்காகவும், ஊரக வளர்ச்சிக்காகவும் பாடுபடுவதுதான் எனது நோக்கம். கல்வி ஒரு முக்கிய படிகட்டுகள். என்னை போலவே கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் கல்வி பயில வேண்டும். அனைவரும் கல்வி பயில அரசு பல முன்னெடுப்புகளை செய்துள்ளது. முக்கியமாக இலவச புத்தகம்,உணவு,உதவி தொகை என பல திட்டங்களை கொண்டுவந்துள்ளது. இதனை பயன்படுத்திகொண்டு கல்வி பயின்று முன்னேற்றம் அடையவேண்டும்.

UPSC தேர்வுக்கு அதிக நேரம் படிக்கவேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் குறிகோள்வைத்து ஆர்வத்துடன் படித்தால் வெற்றி நிச்சயம். தனது தங்கை ஐஸ்வர்யா கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற UPSC தேர்வில் தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும், அகில இந்திய அளவில் 47வது இடத்தையும் பெற்று தற்போது சென்னை பொன்னேரி சார் ஆட்சியராக உள்ளார்” என்றார்.