விஷமருந்திய மாணவனுக்கு வயிற்றுவலி சிகிச்சை- காரைக்காலில் 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட்

 
காரைக்கால் மாணவன் பாலமணிகண்டன்

காரைக்கால் மாணவன் உயிரிழப்பு விவகாரத்தில்,  2 அரசு மருத்துவர்களை சஸ்பெண்டு செய்து புதுச்சேரி சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.

காரைக்கால்: `என் மகளைவிட எப்படி நல்லா படிப்ப?'- விஷம் கொடுத்து பள்ளி மாணவன்  கொலை; பெண் சிறையிலடைப்பு | The student who was poisoned and killed - the  woman who committed ...

காரைக்கால் மாணவன் பால மணிகண்டனுக்கு சக மாணவியின் தாய் குளிர்பானத்தில், விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த விவகாரத்தில், புதுச்சேரி சுகாதார துறை மூன்று பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழு அமைத்தது. இந்த குழு  காரைக்கால் அரசு மருத்துவமணையில் விசாரணை நடத்தியது. இதை தொடர்ந்து அந்த விசாரணை அறிக்கையை,  சுகாதார துறை இயக்குனரிடம்  ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையில், பால மணிகண்டன் மயங்கிய நிலையில் வந்த போது, அவருக்கு எந்த வகையான விஷம் கொடுக்கபட்டது என்பது தெரியவில்லை. 

இருப்பினும் அவருக்கு வாந்தி, வயிற்று வலிக்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. எந்த வகையான விஷம் என்று தெரிந்து இருந்ததால், அதற்கேற்ப சிகிச்சை அளித்து இருக்கலாம் என்று  தெரிவிக்கபட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று பணியில் இருந்த போது, அலட்சியமாக செயல்பட்ட காரைக்கால் அரசு மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜி ஆகியோரை சுகாதாரத்துறை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.