இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் 2 பேர் சஸ்பெண்ட்!

 
inbanidhi poster

அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை நகர பகுதி முழுவதும் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியின் புகைப்படத்துடன் திமுகவினர் போஸ்டர் ஒட்டி இருந்தனர்.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநதி புகைப்படத்துடன் இன்பநிதி பாசறை என்ற வாசகத்துடன் வருகின்ற செப்டம்பர் 24ம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில் இன்பநதியை எதிர்காலமே என்று குறிப்பிட்டும்,  மண்ணை பிளக்காமல் விதைகள் முளைப்பதில்லை போராட்ட களம் இன்றி வெற்றிகள் கிடைப்பதில்லை என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.  புதுக்கோட்டை நகரபகுதி முழுவதும் திமுகவை சேர்ந்த இருவர் புகைப்படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

arivalayam


 
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாஇகள் 2 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் க.செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.