மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு
Updated: Mar 28, 2025, 21:41 IST1743178282099

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஊழியர்களுக்கு தற்போதைய அகவிலைப்படி 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1ஆம் தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலாகும். மத்திய அரசின் 48.66 லட்சம் ஊழியர்கள், 66.55 லட்சம் ஓய்வூதீயர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,614 கோடி கூடுதல் செலவாகும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.