தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்..

 
Rain

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.  

rain

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் நாளை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் வட தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும்.

heavy rain

தமிழகத்தில் ஜூலை 27ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தி.மலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சியில் ஜூலை 27ம் தேதி கனமழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக தேவக்கோட்டை, செய்யூரில் தலா 7 செ.மீ., அம்பத்தூர் - 6, கொத்தவாச்சேரி-5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.