#BREAKING 2 நாள் டாஸ்மாக் மூடல்- மதுப்பிரியர்கள் அதிர்ச்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்கள் (செப்.10,11) டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் தேவர் குருபூஜை உள்பட தலைவர்களின் நினைவு நாள், பிறந்த நாள், குருபூஜை நிகழ்வுகளின்போது அதிகளவில் தொண்டர்கள் வாடகை வாகனங்களில் வருவார்கள். வழித்தடங்களில் இடையூறுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சி னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பரமக்குடியில் செப்.11ல் இமானுவேல் சேகரன் நினைவு நாள், அக்.9 ல் பிறந்த நாள் மற்றும் அக். 30ல் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை விழாவும் நடக்கிறது.
இந்நிலையில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்கள் (செப்.10,11) டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களில் விதிகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

