புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகர்ந்து வருகிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகர்ந்து வருகிறது. இது புயலாக மாறும் சூழ்நிலை உள்ளதால், தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 2ந் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயலுக்கு பெங்கல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயல் காரணமாக புதுச்சேரி கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பலத்த தரைக்காற்று வீசியது. கடலில் அலைகளில் 8 அடிஉயரத்திற்கு மேல் எழுந்துவருகிறது. இதனிடையே புதுச்சேரியில் இன்று காலை முதல் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. லேசான சாரல் மழை பெய்தது. மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 2 நாட்கள் (நவம்பர் 29,30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.