மெடிக்கல் லீவ் எடுத்த 2 நடத்துனர்கள் சஸ்பெண்ட்- அதிகாரிகள் அடாவடி

 
bus ticket

மெடிக்கல் லீவ் எடுத்த இரண்டு நடத்துனர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளடு.

திருநெல்வேலி மண்டல போக்குவரத்து துறைக்கு உட்பட்ட பாபநாசம் பணிமனையில் கண்டக்டர்கள் சாமுவேல் மற்றும் அப்துல் நபி ஆகியோர் உடல்நிலை குறைவு காரணமாக திடீரென மருத்துவ விடுப்பில் சென்றுள்ளனர். அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணிக்கு வந்த போது அவர்களை பாபநாசம் அதிகாரி இரண்டு நாட்கள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கு கண்டக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இதனை கண்டு கொள்ளாத அதிகாரி பணியிடை நீக்கம் முடிந்து மீண்டும் பணிக்கு வந்த இரண்டு கண்டக்டர்களையும் பணியிட மாற்றம் செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த அதிகாரியின் அராஜக போக்கால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். 

உடல் நலக்குறைவு காரணமாக விடுப்பு எடுத்தவர்களிடம் சரியான காரணம் கேட்டு அவர்களிடம் மருத்துவ விடுப்புக்கான சான்றிதழ் பெற்று அவர்களை பணி அமர்த்தி இருக்க வேண்டும். மாறாக அவர்களை பணியிடை நீக்கம் செய்ததோடு உயர் அதிகாரியின் ஆதரவுடன் பணியில் இருந்து தூக்கி அடித்தது ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.