சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி
சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் HMPV தொற்று உறுதி இருப்பது செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2, குஜராத்தில் 1, தமிழ்நாட்டில் 2 என ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சளி, இருமல், ஃபுளு காய்ச்சல், தொண்டை எரிச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை HMPV தொற்றின் அறிகுறியாகும்.
HMPV வைரசால் பாதிக்கப்படும் சிலருக்கு மூச்சிறைப்பு, சுவாசப் பிரச்சனை போன்றவை அறிகுறிகளாக இருக்கும். HMPV வைரஸ் பாதிப்பு முற்றினால் நிமோனியா காய்ச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். HMPV வைரஸ் பெரும்பாலும் குழந்தைகள், பெரியவர்களை தாக்குவதாகவும், அது குறித்து பதற்றம் அடைய தேவையில்லை எனவும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பெங்களூருவில் HMPV வைரசால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளில் ஒரு குழந்தை குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடதக்கது.