தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 குழந்தைகள்- காப்பாற்ற சென்ற தாயும் உயிரிழப்பு

 
ச்

நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 குழந்தைகள் மற்றும் காப்பாற்ற சென்ற தாய் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி அருகே கொலத்துபாளையத்தில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவர் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இந்துமதி என்ற மனைவியும் யாத்விக் ஆர்வின் மற்றும் நிவின் ஆதிக் என இரு மகன்கள் உள்ளனர். இவர் நாமக்கல் அண்ணா நகர் போது பட்டி காலனி பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு  கோவில் திருவிழாவிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் காலை யாதவிக் ஆர்வின் (வயது 3 )  வீட்டு முன்புறமுள்ள நிலத் தொட்டியில் தவறி விழுந்து உள்ளார். அதை கண்ட அவரது அம்மா இந்துமதி தனது கைக்குழந்தையுடன் நிவின் ஆதித் (11 மாதம்) மீட்க முயற்சித்துள்ளார். அப்போது அவரும் தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்துள்ளார். தகவலறிந்த அவரது உறவினர்கள் மூவரது பிரேதத்தையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் தண்ணீர் தொட்டியில் மூழ்கி தாய் மற்றும் அவரது இரு மகன்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.