மனைவியுடன் தொடர்பு - நண்பனை கொலை செய்த 2 பேர் கைது!!

 
tt

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த ஜங்காலஹல்லியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கூலித்தொழில் செய்து வருகிறார்.  இவர் கடந்த 21ஆம் தேதி அதே சேர்ந்த மாயக்கண்ணன் கேசவன் ஆகியோருடன் மது அருந்தியதாக தெரிகிறது.  சாலையில் நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தபோது மற்றொரு நண்பரான அறிவழகன் தனது மனைவியுடன் மணிகண்டன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்து ஆத்திரத்தில் அங்கு வந்துள்ளார். 

murder

என் மனைவியுடன் ஏன் பழகுகிறாய்  என்று கேட்டு,  மணிகண்டனை இரும்பு கம்பியால் அவர் தாக்கியுள்ளார்.  இதில் மணிகண்டன் படுகாயம் அடைந்துள்ளார்.  அறிவழகன் மற்றும் மாயக்கண்ணன் இருவரும் மணிகண்டன் சாலை விபத்தில் அடிபட்டது போல நாடகமாடி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  மணிகண்டன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இருப்பினும் கடந்த 30ஆம் தேதி அவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார்.  இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.   இதையடுத்து ஈரோட்டில் பதுங்கி இருந்த  மாயக்கண்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அறிவழகன் அரூர்  நீதிமன்றத்தில் சரணடைந்தார்.