எடப்பாடியை சேர்ந்த 2 அதிமுக நிர்வாகிள் கட்சியில் இருந்து நீக்கம் - ஈபிஎஸ் அதிரடி

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் இரண்டு பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாட் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சேலம் புறநகர் மாவட்டம் - எடப்பாடி நகரம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, திரு. M.கந்தசாமி, (எடப்பாடி நகர புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் திரு. K.உத்திரராஜ், (எடப்பாடி நகரக் கழக முன்னாள் துணைச் செயலாளர்) ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு.#AIADMK pic.twitter.com/KIadSJUGN3
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) September 12, 2023
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.