2 வாலிபர்கள் - 5 இளம்பெண்கள் : மசாஜ் சென்டர் ரெய்டு

 
g

மசாஜ் சென்டர் என்கிற பெயரில் விபச்சாரத் தொழில் நடந்து வந்திருக்கிறது என்பதும்,  மசாஜ் செய்ய வருபவர்களை ஆசை வார்த்தைகள் சொல்லி விபச்சாரம் நடந்ததும் போலீசின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.   அந்த மசாஜ் சென்டரில்  நடத்திய ரெய்டில் இரண்டு வாலிபர்களும் ஐந்து இளம் பெண்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

n

 திருப்பூரில் அவிநாசி சாலை கீரணி சந்திப்பு அருகே உள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் இயங்கி வருகிறது அந்த மசாஜ் சென்டர் .   இங்கு இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக வாட்ஸ் அப் மூலம்  போலீஸ் கட்டுப்பாட்டு ரகசிய அறைக்கு தகவல்கள் சென்றிருக்கின்றன.   இந்த தகவல்களை அடுத்து திருப்பூர் வடக்கு போலீசார் சம்பந்தப்பட்ட அந்த மசாஜ் சென்டரில் திடீர் ரெய்டு மேற்கொண்டு இருக்கிறார்கள்.

 அப்போது ஐந்து இளம் பெண்களும் இரண்டு வாலிபர்களும் அங்கு இருந்தது தெரிய வந்திருக்கிறது.  அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை, மதுரை பகுதிகளில் இருந்து இளம் பெண்களை வர வைத்து அவர்கள் மூலம் மசாஜ் செய்ய வருபவர்களை ஆசை வார்த்தைகள் சொல்லி விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது.  

 இதன் பின்னர் அந்த மசாஜ் சென்டர் நடத்திய செந்தமிழ் செல்வன் , ஜெகதீசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் . அந்த மசாஜ் சென்டரில் இருந்து ஐந்து இளம் பெண்களையும் மீட்டு  காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர் போலீசார்.