விருதுநகரில் ஆகஸ்ட் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை!!

 
tn

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும் . இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று ஆண்டாள் பிறந்த தினத்தில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறும். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி கோவில் வளாகத்திலேயே தேரோட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

tn

தற்போது இந்த ஆண்டு வழக்கம் போல் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற உள்ளது.  வருகிற 1ஆம் தேதி ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.  இதையடுத்து ஆண்டாள் - ரங்க மன்னருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

tn

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு  ஆகஸ்ட் 1ம் தேதி விருதுநகரில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ஆகஸ்ட் 13ம் தேதி பணிநாளாக செயல்படும் என ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார்.