பொதுத்தேர்வில் 1.18 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்!!

 
school

பொதுத்தேர்வில் 1.18 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்டாகியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

School Education

தமிழகத்தில் 10, 11, 12 ஆம்  வகுப்பு  மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி தொடங்கிய நிலையில்  மே 28 ஆம் தேதி முடிவடைகிறது.  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ஆம் தேதி தொடங்கியது. இத்தேர்வானது  மே 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு மே 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில்  31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு  தேர்வினை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 பேரும் அடங்குவர்.

schools open

இந்நிலையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1.18 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். கொரோனாவால் ஏற்பட்ட சமூக- பொருளாதார நெருக்கடியே மாணவர்கள் பங்கேற்காததற்குக் காரணம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று  நடைபெற்ற  12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 31,403  மாணவர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.