வைரலாகும் '80s ஏஐ போட்டோக்கள்- 15,000 கோடி L தண்ணீர் காலி! இந்த உண்மை தெரியாம எடிட் செய்யாதீங்க!!
80’s காலகட்டத்தை தோற்றம் மற்றும் ஆடையில் பிரதிபலிக்கும் ‘80’s AI Look Trend’ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபலங்கள் தொடங்கி பொது மக்கள் வரை தங்கள் 80's லுக்கை AI மூலம் உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
80's டிரெண்ட், ரெட்ரோ ஸ்டைல் AI புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமை கலக்கி வரும் நிலையில், அதன் மறுபக்கம் அதிர்ச்சி அளிக்கிறது. AI படங்களை உருவாக்கும் சக்திவாய்ந்த தரவு மையங்கள் அதிகளவு தண்ணீரை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் குறிப்பாக 2025-ல் AI தரவு மையங்கள் சுமார் 150 பில்லியன் (15,000 கோடி) லிட்டர் தண்ணீர் பயன்படுத்தியுள்ளதாம். ஒரு AI படம் உருவாக்க 0.01-0.29 கிலோவாட் மணி மின்சாரம் வரை தேவைப்படலாம். கோடிக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பல படங்களை உருவாக்கும்போது, மொத்த மின்சாரப் பயன்பாடு அதிகரிக்கிறது. உலக தரவு மையங்களின் மின்சாரத் தேவை 2030-க்குள் இருமடங்குக்கும் மேல் அதிகரிக்கும் என IEA கணித்துள்ளது. 2 AI உருவாக்கும் படங்களுக்கு தண்ணீரும் தேவை. Al தரவு மையங்களில் உள்ள சேவையகங்களை குளிர்விக்க அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
GPT-3 பயிற்சிக்கு சுமார் 7 லட்சம் லிட்டர் நன்னீர் தேவைப்பட்டதாக ஆய்வு மதிப்பிட்டுள்ளது. 20-50 ChatGPT கேள்விகளுக்கான குளிரூட்டலில் 500 மி.லி. தண்ணீருக்கு சமமான அளவு பயன்படுத்தப்படலாம் என ஆய்வு குறிப்பிடுகிறது. Al-ஐ இயக்கும் GPU, சிப்கள் உள்ளிட்ட வன்பொருட்களுக்கு அரிய கனிமங்கள் மற்றும் தீவிர சுரங்கப் பணிகள் தேவைப்படுகின்றன.
ஒரு AI படம் மட்டும் பெரிய பிரச்சினை அல்ல, கோடிக்கணக்கான படங்கள் தொடர்ந்து உருவாக்கப்படுவதுதான் சுற்றுச்சூழல் சுமையை அதிகரிக்கிறது.

