தமிழகத்தில் இன்று 18வது மெகா தடுப்பூசி முகாம்!!

 
vaccine camp

தமிழகத்தில் இன்று 18வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது.

vaccine

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் தொற்றை  கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தாலும், தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  ஞாயிற்று கிழமைகளில் சுகாதாரத்துறை சார்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில்,  பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த மெகா தடுப்பூசி முகாம் இன்று மாற்றப்பட்டுள்ளது.

vaccine

அந்த வகையில் தமிழகத்தில் இன்று 50  ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம்  நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 1600 முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega-vac-det.jsp என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி  வரை  தடுப்பூசி முகாம் நடைபெறும் நிலையில், 60லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், 10.73 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.