அட்சய திருதியை- ஒரே நாளில் தமிழகத்தில் 18 டன் தங்கம் விற்பனை

 
gold

அட்சய திருதியை நாளான நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 18 டன் தங்கம் விற்பனையாகியுள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Gold Price On April 25, 2022: Yellow Metal Continues To Fall At MCX

தமிழகம் முழுவதும் நேற்று அட்ஷய திருதியை நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நன்நாளில் தங்க நகை வாங்கினால் அது மேன்மேலும் பெருகும் என்ற ஐதீகம் தமிழக மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே நேற்றைய தங்க நகைகள் விற்பனை வெளிப்படுத்துகிறது. 

இது குறித்து தங்க நகை விற்பனையாளர்கள் கூறுகையில், அட்சய திருதியை நாளான நேற்று எதிர்பார்த்த அளவை விட கூடுதலாகவே விற்பனை இருந்ததாக தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் சுமார் 18 டன் தங்கம் விற்பனையாகியுள்ளதாக கூறும் தங்க நகை விற்பனையாளர்கள், இது 2019 ம் ஆண்டை விட 30 விழுக்காடு கூடுதல் விற்பனை என்கின்றனர். கொரோனா காரணமாக 2020, 2021ஆம் ஆண்டு விற்பனை குறைவாக இருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான விற்பனை அதிகரித்துள்ளது.  சாதரணமாக மற்ற நாட்களில் தினசரி 7 முதல் 8 டன் வரையில் தங்கம் விற்பனையாகும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.