வீரமணி வழக்கில் 18 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது கண்டுபிடிப்பு - காவல்துறை
ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் ஆர். வீரமணி தொடர்புடைய சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு காவல்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
அதில், இந்த வழக்குகளில் இதுவரை 18 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 வழக்குகளில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் SIT தெரிவித்துள்ளது. மற்றொரு குற்றவாளியான பிரகாஷ் லண்டனில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரைப் பிடிக்க நீதிமன்ற உத்தரவுடன் இன்டர்போல் மூலம் Blue Corner Notice பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளிலும் விசாரணையை விரைந்து முடித்து, விரைவான விசாரணையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தர நடவடிக்கை தீவிரமாக எடுத்துவருவதாகவும் சிறப்பு புலனாய்வு காவல்துறை கூறியுள்ளது.

