அதிமுக வேட்பாளர் பட்டியலில் 17 பெண் சிங்கங்கள்! - மதுராந்தகம் முதல் விளாத்திகுளம் வரை மகளிர் ஆதிக்கம்.

 
eps

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்பாளர் தேர்வில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இம்முறை பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, புதிய முகங்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளித்து அரசியல் களத்தில் ஒரு புதிய மாற்றத்தைத் தொடங்கியுள்ளார். இதுவரை வெளியான அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில், மாநிலம் முழுவதும் 17 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மதுராந்தகம் (தனி) தொகுதியில் மரகதம் குமரவேல், நிலக்கோட்டையில் தேன்மொழி, ஸ்ரீவில்லிபுத்தூரில் சந்திர பிரபா மற்றும் லால்குடியில் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் போன்றோர் களமிறக்கப்பட்டுள்ளனர். சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பெண்களை வேட்பாளர்களாகத் தேர்வு செய்ததன் மூலம், பெண் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்ட அதிமுக திட்டமிட்டுள்ளது.

அதிமுக பெண் வேட்பாளர்கள்:

  • மதுராந்தகம் தனி – மரகதம் குமரவேல்
  • குடியாத்தம் தனி – பரிதா புருஷோத்தமன்
  • பாப்பிரெட்டிபட்டி – மரகதம் வெற்றிவேல்
  • வந்தவாசி – பி ராணி
  • ஆரணி – ஜெயசுதா
  • விழுப்புரம் – விஜயா
  • ஏற்காடு – உஷாராணி
  • தாராபுரம் – சத்தியபாமா .
  • நிலக்கோட்டை – தேன்மொழி
  • கிருஷ்ணராயபுரம் – டாக்டர் திவ்யா .
  • துறையூர் – சுரோஜா
  • சீர்காழி – சக்தி
  • திருவிடைமருதூர் – இளமதி சுப்பிரமணியம் .
  • ஸ்ரீவில்லிபுத்தூர் – சந்திர பிரபா .
  • திருவாடானை – கீர்த்திகா முனியசாமி .
  • விளாத்திகுளம் – சத்யா
  • லால்குடி – டாக்டர் லீமா ரோஸ் மார்டின் .

பெண் வேட்பாளர்களுக்கு இணையாக, இம்முறை 42 புதிய முகங்களுக்கு முதல்முறையாகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையத்தில் வி.பி. பிரபு, நாமக்கல்லில் ஸ்ரீதேவி மோகன், வால்பாறையில் லட்சுமணன் மற்றும் திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதியில் ராஜசேகரன் எனப் பல இளம் மற்றும் புதிய நிர்வாகிகள் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். பழைய முகங்களுக்குப் பதிலாகப் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதன் மூலம், கட்சியின் கட்டமைப்பைப் புதுப்பித்து, தேர்தல் களத்தில் புத்துணர்ச்சியுடன் செயல்பட எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்துள்ளார்.

  • கும்மிடிப்பூண்டி v. சுதாகர்
  • ஆம்பூர் வெங்கடேசன்
  • பர்கூர் கோவிந்தராஜன்
  • பாப்பிரெட்டிப்பட்டி மரகதம் வெற்றிவேல்
  • செங்கம் வேலு
  • வந்தவாசி ராணி
  • வானூர் முருகன்
  • விழுப்புரம் விஜயா
  • திருக்கோவிலூர் பழனிசாமி
  • சங்கராபுரம் ராகேஷ்
  • கள்ளக்குறிச்சி ராஜீவ் காந்தி
  • ஏற்காடு உஷாராணி
  • சேலம் தெற்கு வினோத்
  • வீரபாண்டி பாலாஜி சுகுமார்
  • நாமக்கல் ஶ்ரீதேவி மோகன்
  • திருச்செங்கோடு சந்திரசேகர்
  • ஈரோடு கிழக்கு மனோகரன்
  •  தாராபுரம் சத்யபாமா
  • அந்தியூர் ஹரி பாஸ்கர்
  • கோபிசெட்டிபாளையம் பிரபு
  • வால்பாறை லட்சுமணன்
  • ஆத்தூர் விஸ்வநாதன்
  • அரவக்குறிச்சி செல்வகுமார்
  • கிருஷ்ணராயபுரம் திவ்யா
  • குளித்தலை கருணாகரன்
  • மணப்பாறை விஜயகுமார்
  • திருச்சி கிழக்கு ராஜசேகரன்
  • லால்குடி லீமா ரோஸ்
  • முசிறி யோகநாதன்
  • துறையூர் சரோஜா
  • பண்ருட்டி மோகன்
  • குறிஞ்சிப்பாடி புவனேந்திரன்
  • திருத்துறைப்பூண்டி பாலதண்டாயுதம்
  • பாபநாசம் சண்முக பிரபு
  • ஒரத்தநாடு – எம்.சேகர்
  • பேராவூரணி – இளங்கோ
  • மதுரை கிழக்கு – மாங்குளம் மகேந்திரன்
  • விருதுநகர் – கணேசன்
  • அருப்புக்கோட்டை -சேதுபதி
  • விளாத்திகுளம் -சத்யா
  • சங்கரன்கோயில் -திலீபன் ஜெய்சங்கர்
  • பாளையங்கோட்டை – சையது சுல்தான் சம்சுதீன்

பழைய மற்றும் புதிய நிர்வாகிகளின் கலவையாக அமைந்துள்ள இந்தப் பட்டியல், குறிப்பாகத் தென் மற்றும் கொங்கு மண்டலங்களில் அதிமுகவின் பிடியை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.