பஞ்சாப்பில் 16 மணி நேர மின்வெட்டு... ஆனால் தமிழ்நாட்டில் மின் விநியோகம் சீராக உள்ளது - அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்..!

 
1

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் எரிசக்தித்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தலைமையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் விநியோகப் பிரிவில் பணியாற்றும் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் மின் கொள்முதல், பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தித்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக அனுமதிச் சீட்டில் என் தலையீடு கிடையாது. என் சார்பாக என் குடும்பத்தினர் கூட இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இந்து சமய அறநிலைத்துறை சார்பாக பாஸ் கொடுக்கப்பட்டது. கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. வழக்கம்போல திமுகவை சார்ந்தவர்கள் இந்த குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற வேண்டும்; பொதுமக்களுக்கு எந்த விதமான சிரமமும் இருக்கக்கூடாது என்பதால் அனுமதிச் சீட்டில் என் தலையீடு கிடையாது. என் சார்பாக என் குடும்பத்தினர் கூட இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இந்து சமய அறநிலைத்துறை சார்பாக பாஸ் கொடுக்கப்பட்டது. கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. வழக்கம்போல திமுகவை சார்ந்தவர்கள் இந்த குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

மின்சாரப் பற்றாக்குறை சரி செய்வதற்கான வேலையைச் செய்து வருகிறோம். பொது தொகுப்பில் இருந்து கொள்முதல் செய்து கொண்டிருக்கிறோம். பஞ்சாப்பில் 16 மணி நேர மின்வெட்டு உள்ளது. இதே மாதிரியான மின்சார தட்டுப்பாடு அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறது. கேரளம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடியாததால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அறிவித்து மின்சாரத்தைத் துண்டிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் மின்சார பற்றாகக்குறையை சரி செய்வதற்கு பொது தொகுப்பில் இருந்து கொள்முதல் செய்திருக்கிறோம். மின்னகத்தில் உள்ள எண்ணில் தொடர்ந்து புகார் அதிகரித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு என்ன மாதிரியான புகார்கள் இருக்கிறது என்பது குறித்து குழு அமைத்து கண்காணிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மின்சாரப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாத இறுதியில் தான் காற்றாலை மின்சாரம் முடிவடையும். ஆனால் செப்டம்பர் மாதம் தொடங்கிய உடனே அது முடிவடைந்துவிட்டது. தற்போது அக்டோபர் மாதத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

டிடிவி தினகரன் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார். மிசாவில் தான் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம்கூட கூச்சமே இல்லை. 10 வருடம் முற்றிலுமாக ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் டிடிவி தினகரன். டிடிவி தினகரனின் இத்தகைய வளர்ச்சிக்கு அவரது சித்தி தான் காரணம்; அவரையே ஒதுக்கி வைத்தவர் தான் டிடிவி தினகரன். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவதற்கு துடித்துக் கொண்டிருக்கிறார்.

திமுகவிற்கும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய பேச்சைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவது தவறு. அவர் முன்பு ஒரு மாதிரியும், தற்போது ஒரு மாதிரியும் மாற்றி மாற்றி பேசக்கூடிய நபர். எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவது தான் ஒரே நோக்கம் என்று சொன்னவர் டிடிவி தினகரன். இன்றைக்கு அவரை முதலமைச்சராக்குவதற்கு பேப்பரை தூக்கிக் கொண்டு ஆளுநர் மாளிகை வரை சென்றார்.

யார் முதலமைச்சர் ஆகப்போகிறாரோ, அவர்தான் சட்டமன்ற உறுப்பினர் கடிதத்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் பழனிசாமிக்காக இவர் தூக்கிக் கொண்டு செல்கிறார். அப்படிப்பட்டவர் தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக பேசிக் கொண்டிருக்கிறார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம், வெளிப்படையானது மக்களுக்கான பயணம்" எனத் தெரிவித்துள்ளார்.