சென்னையில் அதிர்ச்சி! 150 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

 
theft theft

சென்னையில் தொழிலதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை நௌம்பூரில் தொழிலதிபர் சிவகுமார் என்பவர் வசித்து வந்தார். சிவகுமார் தொழில் நிமித்தமாக வெளியில் சென்றிருந்த போது இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து உள்ளே இருந்த 150 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளனர். கருங்கல்லால் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். 

வீடு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவகுமார் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 150 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது. இது தொடர்பாக சிவகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய பிரமுகர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.