திருவாரூர் அருகே 150 கிலோ கஞ்சா பறிமுதல்

 
kanja

திருவாரூர் அருகே காரில் கஞ்சா கடத்திய இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்து 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்ற பாமக மா.செ. பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்..!

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா கடத்தப்படுவதாக தஞ்சை சரக காவல் துறைத் தலைவருக்கு புகார்கள் வந்துள்ளன. இதற்கென அமைக்கப்பட்ட தனிப்படை  போலீசார், பல்வேறு மாவட்டங்களில்  விசாரணை நடத்தி கஞ்சா கடத்துபவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ரொக்க குத்தகை என்ற இடத்தில் இன்று வாகன சோதனையில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேதாரண்யத்தில் இருந்து வந்த காரை சோதனையிட்ட போது, அதில் 150 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் வந்த மகேஸ்வரன்(22) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தில்,  அவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் என்பதும், வேதாரண்யத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு 150 கிலோ கஞ்சாவை காரில் கடத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து மகேஸ்வரனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், 150 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.