15 வயது சிறுமி பலாத்காரம்- தொழிலாளி சிறையிலடைப்பு

 
r

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 நாமக்கல் மாவட்டத்தில் எருமைப்பட்டி அடுத்த பொட்டிரெட்டிபட்டி.  இப்பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன். ஐம்பது வயதான இந்த வாலிபர் கூலித் தொழிலாளி . 

rr

தான் வசித்து வரும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை நோட்டமிட்டு வந்திருக்கிறார்.  அவர் வீட்டில் தனியாக இருந்தபோது அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.   சிறுமியின் தாயார் வீடு திரும்பியதும்  இதைச்சொல்லி அழுது இருக்கிறார் . உடனே அச்சிறுமியின் தாயார் நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று ரங்கன் மீது புகார் அளித்துள்ளார். 

 இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் .  கைது செய்யப்பட்ட ரங்கன் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் வருத்தப்பட்டார்.  நீதிபதியின் உத்தரவை எடுத்து அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.  

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த சிறுமி, ரங்கனின்  நெருங்கிய உறவினர் ஆகும்.