அரசு மாணவர் விடுதியில் சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
உசிலம்பட்டி அருகே மாணவர் விடுதியில் உணவருந்திய 15 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் அருகிலேயே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் 15 மாணவர்கள் தங்கியுள்ள சூழலில், இன்று காலை உணவாக இட்லி சாப்பிட்ட 15 மாணவர்களுக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாணவர்கள் அனைவரையும் அருகில் உள்ள எழுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில் அனைவருக்கும் மருத்து குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன.
இந்த சம்பவம் அறிந்து உசிலம்பட்டி கோட்டாச்சியர் சண்முக வடிவேல் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்களும், மதுரை மாவட்ட மருத்துவ அலுவலர் குமரகுருபரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.


