அதிமுகவிலிருந்து கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேர் நீக்கம்

 
edappadi palanisamy

தலைமைக் கழக அறிவிப்பு கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் , சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு . எடப்பாடி K. பழனிசாமியின் முக்கிய அறிவிப்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழகத்தின் கொள்கைகளுக்கும் , குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் , கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் , அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் மேற்கொண்டவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். 

Edappadi says proof documents not compulsory for NPR - The Hindu

அதன்படி, “திரு . கு.ப. கிருஷ்ணன் ,  முன்னாள் அமைச்சர் திரு . C. ராஜேந்திரன் , Ex . M.L.A. , ( கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் ) திரு . K.S. சீனிவாசன் , Ex . M.L : A . , ( கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் ) திருமதி ஆர் . ராஜலட்சுமி , Ex . M.L.A. , ( கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கழக இளைஞர் பாசறை , இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ) திரு . S.M.K. முகம்மதுஅலி ஜின்னா , ( கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் ) திரு . M. பாரதியார் , ( கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் ) திரு . P.S. சிவா , ( கழக எம்.ஜி.ஆர் . இளைஞர் அணி துணைச் செயலாளர் ) திரு . ஆம்னி பஸ் அண்ணாதுரை , ( கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர் ) திரு . M.R. ராஜ்மோகன் , ( திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் ) திரு . C. ராமசந்திரன் , ( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டல துணைச் செயலாளர் ), திரு . மணவை J. ஸ்ரீதரன் ராவ் , ( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டல துணைத் தலைவர் ) திருமதி T. சுஜைனி , ( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை மண்டல இணைச் செயலாளர் ) திரு . R. விஜய் பாரத் , ( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை மண்டல துணைச் செயலாளர் ) திருமதி V. மோகனப்பிரியா , ( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை மண்டல துணைச் செயலாளர் ) திரு . G. மோகன் , ( கழக அண்ணா தொழிற்சங்க மின்சாரப் பிரிவுப் பொருளாளர் ) ஆகியோர் , இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்வதாக எடப்பாடி K. பழனிசாமி தெரிவித்துள்ளார்.