அதிமுகவில் இருந்து மேலும் 15 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு வரப் போகிறார்கள்’ - அமைச்சர் செங்கோட்டையன்..!!

 
Q

அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் பேசியதாவது:-

அதிமுகவில் இருந்து என்னை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். தற்போது நான் எங்கு இருக்கிறேன் என்பதைப் பார்க்க வேண்டும். யானை தேய்ந்து கட்டெறும்பான கதையாக அதிமுகவின் நிலை உள்ளது.அதிமுகவில் இருந்து 15 பேர் சீக்கிரமே வெளியே வர போகிறார்கள்.. 

நல்லவேளை பழனிசாமி என்னை நீக்கினார், அங்கு இருந்து வந்ததால் மக்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தேர்தலில் நான் வருவேன், நீ வருவாய் என்று பேசியவர்கள் இரண்டாம், மூன்றாம் இடத்துக்கு சென்றுவிட்டனர்.

.

தேர்தலில் நான் வருவேன், நீ வருவாய் என்று பேசியவர்கள் தற்போது 2-வது, 3-வது இடங்களுக்கு சென்றுவிட்டனர். தற்போது தேர்தல் களத்தில் கூட பலரால் நிற்க முடியவில்லை.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு, முதலமைச்சர் விஜய்யைப் போன்ற ஒருவரை நான் பார்க்கவில்லை.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அதனைத்தொடர்ந்து, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.