இலங்கையிலிருந்து 15 மீனவர்கள் சென்னை திரும்பினர்!

 
tn

தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. மீனவர்களை கைது செய்வதுடன் அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

fisher

இந்நிலையில்  இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் சென்னை திரும்பினர். எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படகினரால் அக்டோபர் 14ஆம் தேதி 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் நவம்பர் ஒன்பதாம் தேதி 63 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட 63 பேரில் முதல் கட்டமாக 15 மீனவர்கள் திரும்பினர். இரண்டாவது முறையாக கைதான மீனவர் முருகனுக்கு இரண்டு ஆண்டு  தண்டனை விதிக்கப்பட்டது.

arrest

முன்னதாக இலங்கை கொள்ளையர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கி அவர்களின் பொருட்களை அபகரித்து சென்றது குறிப்பிடத்தக்கது.