ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் - 14 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!!

 
tn

அதிமுக அலுவலக தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைதான ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்ற  கூட்டத்தை புறக்கணித்த ஓ. பன்னீர்செல்வம்,  சென்னை ராயப்பேட்டையில்  அமைந்துள்ள தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.  இதனிடையே ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.   இந்த மோதலில்  இரண்டு காவலர்கள் உட்பட 59 பேர் காயமடைந்தனர். இதில் சிலருக்கு கத்தி குத்தும் விழுந்தது. 55 பேர் அரசு  மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்ற நிலையில்,  நான்கு பேர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .14 வாகனங்கள் இந்த கலவரத்தில் சேதம் அடைந்தன.

tn
இந்த சூழலில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து வருவாய் துறையினர் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து 14 பேரை கைது செய்தனர்.

tn

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேர் ,  15 நாட்கள்  நீதிமன்ற காவல் அடைக்க நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 14 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.