பாலாஜி உத்தம ராமசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!!

 
tn

கோவையில் காவல்துறையினரைக் கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்தி  வருகின்றனர்.

tn

 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோவையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கலந்துகொண்டு ஆ.ராசாவை  கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்.  புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இன்று காலை கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தமர் ராமசாமியை கைது செய்தனர்

bjp

இந்நிலையில் கோவையில் கைது செய்யப்பட்ட பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. உத்தம  கண்டித்து கோவையில் காவல்துறையினருக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன்  நீதிபதி இல்லம் அருகே குவிந்த பாஜகவினர் காவல்துறைக்கு எதிராக முழக்கமிட்டனர். உத்தம ராமசாமி கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கோவை மாநகர் மாவட்ட தமிழக பாஜக தலைவரை தமிழக காவல்துறை கைது செய்திருப்பதும், கைது செய்யப்பட்ட விதமும் வன்மையாக கண்டிக்கத்தக்கது .திமுக அரசின் இம்மாதிரி மிரட்டல்களை கண்டு அஞ்சுவதில்லை எங்கள் தொண்டர் கூட்டம் .சட்டப்படியாக இதை சந்திப்போம்  என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.