17வயது சிறுமி விவகாரத்தில் 15 சிறுவனின் தண்டனை ரத்தானது

 
lo

திருவள்ளூர் மாவட்டத்தில் பதினைந்து வயது சிறுவனும் 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்.  இவர்கள் தனிமையிலும் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததால் சிறுமி கர்ப்படம் அடைந்திருக்கிறார்.

இதனால் இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரியவர,  போலீசில் புகாரளிக்க,  சிறுவனுக்கு  மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது திருவள்ளுர் சிறார் நீதி குழுமம் . இந்த உத்தரவை எதித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பாக  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  குழந்தைகளுக்கு மட்டுமல்லாது காவல்துறையினருக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்திய டிஜிபி சைலேந்திர பாபுவின் பதிவு ஆறுதல் அளிக்கின்ற வகையில் உள்ளது என்றும்,  ஊரடங்கு காலத்தில் பெற்றோருடன் நெருக்கம் குறைந்து, மின்னணு சாதனங்களில் மூழ்கிய குழந்தைகள், கொரோனாவை விட கொடிய தொற்றாக மனதை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். 

hr

காதலும் இனக்கவர்ச்சியும் தவறாக புரிந்துகொள்ளப்படுகின்ற எனவும் தெரிவித்த நீதிபதி,  திருவள்ளூர் சிறார் நீதி, சிறுவனுக்கு வழங்கியிருந்த மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.  

சம்பவம் நடந்தபோது சிறுமி, மைனர் என்று சிறார் நீதிவாரியத்தில் நிரூபிக்கப்படவில்லை.  சிறுவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டிருப்பதால் தண்டனை ரத்து செய்யப்படுகிறது எனவும் தெரிவித்தார்.