தூத்துக்குடியில் இரு நாட்களுக்கு 144 தடை உத்தரவு!

 
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசேகத்தக்கதேவி ஆலய திருவிழா நாளை மே 10ஆம் தேதி மே 11ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ளதால் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று 9/5/2024 மாலை ஆறு மணி முதல் 12/5/2024 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் அமைந்துள்ளது வீரசக்கதேவி ஆலயம் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான இந்த ஆலயத்தின் திருவிழா நாளை மே 10-ம் தேதி மற்றும் 11-ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜோதி எடுத்து வரப்பட்டு ஆலயத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்படும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்ய வருவர்

இதைத்தொடர்ந்து சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒன்பதாம் தேதி மாலை 6 மணி முதல் வருகிற 12-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.