சென்னையில் 3 நாளில் 14,000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

 
3 நாளில் 14,000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

சென்னையில் கனமழை பெய்த நேரத்தில் 14 ஆயிரத்து 493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

rain

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை  சென்னை அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  இதனையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  அத்துடன் கடந்த 2 நாட்களாக இந்த நான்கு மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால்  காற்றழுத்த தாழ்வு மண்டலமானது  தெற்கு ஆந்திரா நோக்கி கரையைக் கடந்ததால்  சென்னையில்  அதி கனமழைக்கான வாய்ப்பு குறைந்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த கனமழை எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது.  

இந்நிலையில் சென்னையில் கனமழை பெய்த நேரத்தில் 14 ஆயிரத்து 493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இரவு, பகலாக பணியாற்றிய சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கவுரவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு அசைவ விருந்து வைத்து மகிழ்ச்சி படுத்தினார்.