மின்சாரம் தாக்கி 14 வயது மாணவன் உயிரிழப்பு

 
death

ஆண்டிபட்டி அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Class IX student faints at school, dies in hospital

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது  14 வயது மகன்  ஒன்பதாம் வகுப்பு மாணவன் நவீன். இன்று மாலை மாணவன் நவீன் வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது சுவர் ஓரம்  சென்ற மின்சார கம்பி கவனக்குறைவாக பட்டதில்  மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். இதையடுத்து  உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர் .  அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் நவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் .  

இதையடுத்து நவீனின் பெற்றோர்களும் உறவினர்களும் மருத்துவமனையில்  கதறியழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. சம்பவம் குறித்து தகவலறிந்த ஆண்டிபட்டி  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . நாளை தமிழர் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தால் ரங்கசமுத்திரம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது