ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழப்பு!

 
tn

ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள சந்தப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்தவர் தவக்குமார்.  இவரின் மனைவி மற்றும் மகள் கலையரசி,  மைத்துனர் ஆகிய நான்கு பேர் பரமத்தி சாலையில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் சவர்மா பார்சல் வாங்கி வந்துள்ளனர் .

tn

இதே போல நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி தனக்கு பிறந்த நாள் என்பதால் நண்பர்கள் 13 பேருக்கு ட்ரீட் கொடுப்பதற்காக அதே உணவகத்தில் சவர்மா வாங்கியதாக தெரிகிறது. இந்த சூழலில் 13 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது .இதை அடுத்து கல்லூரி விடுதி ஊழியர்கள் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Death

இதனிடையே  இதே உணவகத்தில் சவர்மா வாங்கி சாப்பிட்ட தவக்குமாரின் 14 வயது மகள் கலையரசி மற்றும் அவரது அம்மா சுஜாதா, அத்தை கவிதா, மாமா பூபதி ,மாமன் மகள் சுனோஜி ஆகியிருக்கும் வாதி மயக்கம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து  கலையரசி மட்டும் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று மாலை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.  பின்னர் அவர் வீடு திரும்பினார்.  மற்ற நால்வருக்கும் வயிற்றுப்போக்கு வாந்தி அதிகமாகவே நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சூழலில் மாணவி கலையரசி வாந்தி , மயக்கம் ஏற்பட்டு இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார் . இவரின் உடலை மீட்ட போலீசார் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சவர்மா சாப்பிட்ட 17 பேரும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.