அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தத்தில் இடம்பெற்ற 14 அம்சங்கள்..!!
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பிரான்ஸில் ஜி7 உச்சிமாநாட்டுக்குப் பிறகு நடந்த நிகழ்வில், அமைதி ஒப்பந்தத்தில் இருநாடுகளுக்கு கையெழுத்து விட்டன.
14 முக்கிய அம்சங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தத்திற்கு 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமைதி ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை தற்போது காணலாம்.
*அமெரிக்கா 30 நாட்களுக்குள் ஈரானுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகளை திரும்பப் பெற வேண்டும்.
*அமைதி ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த இருநாடுகளுக்கும் 60 நாட்கள் அவகாசம் உள்ளது.
*60 நாட்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை வணிகக் கப்பல்கள் பாதுகாப்புடன் கடந்து செல்ல ஒத்துழைப்பு வழங்குவதுடன், எந்தவொரு கட்டணமும் ஈரான் வசூலிக்கக் கூடாது.
*ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கக் கூடாது. ஈரானின் செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருட்களை சர்வதேச அணுசக்தி முகமையின் மேற்பார்வையின் கீழ் அழிப்பதற்கு இரு நாடுகளும் ஒத்துழைக்கும்.
*போரினால் பாதிக்கப்பட்ட ஈரானை மறுசீரமைக்க ரூ.28 லட்சம் கோடி நிதி வழங்க அமெரிக்கா உறுதி
*ஈரானுக்கு எதிரான அனைத்து வகையான பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவரும். இதற்கான குறிப்பிட்ட கால அட்டவணை இறுதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வகுக்கப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

