தென்மாநிலங்களில் இருந்து 14 பாஜக அமைச்சர்கள்?
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் வருகிற 9 ஆம் தேதி நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார்.
இந்நிலையில் அண்ணாமலை, தமிழிசை, எல்.முருகன் உள்பட தென்மாநிலங்களில் இருந்து 14 பேர் பாஜக சார்பில் மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளது. ஆந்திராவில் பாஜக சார்பில் புரந்தேஸ்வரியும், கேரளாவில் வென்ற நடிகர் சுரேஷ் கோபியும் மத்திய அமைச்சராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானாவில் கிஷண் ரெட்டி, ஏடலா ராஜேந்தர், டி.கே. அருணா, டி அரவிந்த் பன்டி விஜய் ஆகியோர் அமைச்சராக வாய்ப்புள்ளது. கர்நாடக பாஜகவில் இருந்து பிரஹலாத் ஜோஷி, பசவராஜ் பொம்மை, கோவிந்த் கர்ஜோல், பி.சி.மோகன் அமைச்சராகக் கூடும். ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், நித்யானந்த் ராய், சர்பானந்த சோனோவால் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக தொடர வாய்ப்பு இருக்கிறது.