தமிழகத்திற்கு வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது!!

 
arrest

 தமிழகத்துக்கு அகதிகளாக வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது . அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து பெட்ரோல் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு அரசுக்கு எதிராக கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

fisher

இந்த சூழலில் இலங்கை தமிழர்கள் ஆபத்தான முறையில் கடல் வழியாக பயணம் மேற்கொண்டு தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.  இதுவரை 50க்கும் மேற்பட்டோர் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வருகை புரிந்துள்ளனர். 

fisher

இந்நிலையில் தமிழகத்துக்கு அகதிகளாக வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகில் வர முயன்ற 14 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக தஞ்சம் அடைய முயன்றவர்களில்  மன்னார் கடற்பரப்பில் 12 பேரையும்,  ஏழாம் பகுதி தீடை பகுதியில் இரண்டு பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது.