BREAKING அந்தியூர் அருகே வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற 13 வயது சிறுமி மாயம்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 13 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்ற 13 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற 13 வயது சிறுமி நிவேதிதா காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமி பள்ளிக்கு வரவில்லை என பள்ளியில் இருந்து எஸ். எம். எஸ் வந்ததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறுமி காணாமல்போனது குறித்து பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுமி தனது தந்தையின் சட்டைப் பையில் இருந்து ரூ. 1,000 எடுத்துள்ளார். இதற்காக அவரது தாயார் சிறுமியைக் கண்டித்துள்ளார். இதனால் பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி சிறுமி சத்தியமங்கலத்திற்குச் செல்லும் பேருந்தில் ஏறிச் செல்லும் சிசிடிவி காட்சிகளில் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். மேலும் அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

