தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

 
assembly

தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசின் கீழ் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக மாற்றங்களுக்காக அவ்வபோது தமிழக அரசு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குவது வழக்கம். இந்த நிலையில், தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
தமிழ்நாடு போலீஸ் அகாடமி  கூடுதல் இயக்குனராக  தேன்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். யாதவி கிரிஷ் அசோக்கிற்கு திருப்பூர் தெற்கு துணை கமிஷ்னர் ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மது குமாரிக்கு மதுரை வடக்கு துணை கமிஷ்னர் ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் கோவை வடக்கு துணை கமிஷனர் ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. விவேகானந்தன் சுக்லா பதவி உயர்வில் திருச்சி வடக்கு மண்டல துணை கமிஷனர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரத் கருண் உத்தவ்ராவ் மதுரை தெற்கு துணை கமிஷனர் ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

அன்பு ரயில்வே எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார். வனிதா மாஸ்டர் கன்ட்ரோல் ரூம் எஸ்.பி., ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ரமேஷ் பாபு  மாடர்ன் கன்ட்ரோல் ரூம் துணை கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். மகேஸ்வரன் பெருநகர சென்னை, பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரோகித் நாதன் ராஜகோபால் கோவை போக்குவரத்து துணை கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். பாலாஜி சென்னை (வெல்பேர்) உதவி ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அதிவீரபாண்டியன் பெருநகர சென்னை நிர்வாக துணை கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.