புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் கைது

 
fisher

தமிழ்நாட்டை சேர்ந்த  13 மீனவர்கள்  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

fisher

 எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  அத்துடன் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. 

arrest

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டியதாகக் கூறி, 3 படகுகளுடன் 13 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.  புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் 13 தமிழக மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.  மீனவர்கள் சென்ற 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.