ரயிலில் இருந்து இறங்கியவர்கள் மீது மற்றொரு ரயில் மோதி கோர விபத்து - 13 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு ரயிலில் இருந்து இறங்கியவர்கள் மீது மற்றொரு ரயில் மோதிய கோர விபத்த்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜால்கான் பகுதியில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் மீது கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. விரைவு ரயில் மோதியதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். புஷ்பக் ரயிலில் தீ எச்சரிக்கை அலாரம் அடித்ததால், பயத்தில் இறங்கியவர்கள் மீது மற்றொரு ரயில் மோதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ₹5 லட்சம் நிவாரண தொகையை மாநில அரசு அறிவித்துள்ளது. படுகாயமடைந்த நபர்களுக்கு சிகிச்சைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.