13நாள் தொடர் உண்ணாவிரதம்- பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு வந்த முருகன்

 
mu

சிறையில் 13 வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம்  இருந்து வந்த  முருகன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.  பின்னர் மீண்டும் அவர் வேலூர் சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

m

 மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன்,  வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.  தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து  முருகன் சிறையில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.   சிறையில் வழங்கப்படும் உணவுகளை தவிர்த்து பழங்களை மட்டுமே உட்கொண்டு வருகிறார்.  இப்படி 13 வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.  முருகனின் உடல் நிலையை சிறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 இந்நிலையில் பாகாயம் காவல் நிலையத்தில் அவர் மீது இருக்கும் ஒரு குற்ற வழக்கு குறித்த விசாரணை வேலூர் நீதிமன்றத்தில் நடந்தது.  அந்த விசாரணைக்காக வேலூர் சிறையில் இருந்த முருகன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்ட முருகன் விசாரணைக்கு பின்னர் மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.   இது தொடர்பான வழக்கு மறு விசாரணையினை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டு உள்ளார் மாஜிஸ்திரேட்.