+2 தேர்வில் குறைந்த மதிப்பெண்ணா? மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

 
tn


பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இன்று முதல் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற்றுக் கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

school

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மே 9ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்கள் மூலமாகவும் செவ்வாய்க்கிழமை (மே 7) காலை 11 மணி முதல் சனிக்கிழமை (மே 11) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

school

பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியா்கள் வழியாக மதிப்பெண் பட்டியலை மே 9-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றைப் பதிவுசெய்து, இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதேபோன்று தனித்தோ்வா்கள் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து இணையதளத்தில் தாங்களே மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் எதாவது ஒன்றுக்கு மட்டுமே தோ்வா்கள் விண்ணப்பிக்க முடியும். தோ்வா்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன்பின்னா் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.