நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு- பயத்தில் மாணவி தற்கொலை
May 7, 2025, 20:03 IST1746628395594
நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் படுகை புது தெருவில் வசித்து வந்த புண்ணியமூர்த்தி மகள் ஆர்த்திகா (வயது 17) தேர்வு முடிவு பயம் காரணமாக இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பாபநாசத்தில் உள்ள அரசு பள்ளியில் +2 தேர்வு எழுதி இருந்த ஆர்த்திகா தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் இன்று தன் சுடிதார் துப்பட்டாவால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெற்றோர்கள், குடும்பத்தினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆர்த்திகாவின் தந்தை புண்ணியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து ஆர்த்திகாவின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


