தனியார் பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
tntn

கீழச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

suicide

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் பூசனம்.  இவருக்கு முருகம்மாள் என்ற மனைவியும் சரளா என்ற 17 வயது மகளும் உள்ளனர்.  பூசனத்தின் மகள் சரளா திருவள்ளூர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சி உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவர் அங்குள்ள விடுதியிலேயே தங்கி படித்து வந்துள்ளார்.  இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

suicide

 நண்பர்கள் உணவு அருந்தி சென்றுவிட்ட நிலையில் சரளா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இது குறித்து தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திரதாசன் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. வருவாய் துறை அதிகாரிகள் ,காவலர்கள் ,விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.